சொற்களஞ்சியம்

இது Roman Script for Indian Words என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

IAST என்பது சங்கதம் மற்றும் தொடர்புடைய பாரத மொழிகளால் பயன்படுத்தப்படும் பாரத எழுத்துக்களை ஒலி இழப்பின்றி உரோமானியமயமாக்க அனுமதிக்கும் ஒரு ஒலிபெயர்ப்பு திட்டமாகும். இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் சார்லஸ் ட்ரெவெலியன், வில்லியம் ஜோன்ஸ், மோனியர் மோனியர்-வில்லியம்ஸ் மற்றும் பிற அறிஞர்களின் பரிந்துரைகளிலிருந்து உருவான ஒரு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் செப்டம்பர் 1894 இல் ஜெனிவா ஓரியண்டல் காங்கிரஸின் ஒலிபெயர்ப்புக் குழுவால் முறைப்படுத்தப்பட்டது. IAST அசல் பாரத எழுத்தில் இருந்ததைப் போலவே, பாரத உரையை வாசகருக்கு சந்தேகத்திற்கு இடமின்றி வாசிப்பதை சாத்தியமாக்குகிறது. பாரத மொழிகளின் ஒலிகளுக்கு IAST கொடுக்கும் துல்லியமே அறிஞர்களிடையே அதன் தொடர்ச்சியான பிரபலத்திற்கு காரணமாகும்.

ஆனால் அதிலும் தவருகள் உள்ளன. உரோமானிய மொழிகளில் எழுதப்படும் சில எழுத்துக்களை ஆங்கிலத்தில் உச்சரிக்கயில் சில மாறுபடுத்தல் உண்டு. அவற்றை விளக்கமாக புரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்க்கவும்.

பாரத மொழிகள் ஒலிப்பு அடிப்படையிலானவை. தர்க்கரீதியாக சிந்தித்துப் பார்த்தால், ஒலிகளே மொழிகளின் மையம் மற்றும் இந்த ஒலிகள் இடம் மற்றும் நேர எல்லைகளில் கடத்தப்பட வேண்டியிருக்கும் போது எழுத்துமுறை பின்னர் வருகின்றன. பாரத மொழிகளில் ஒலிகளை பொறிக்க பல்வேறு எழுத்துமுறைகள் இருந்தன. அவற்றில் முக்கியமானவை பிராமி எழுத்துக்கள் மற்றும் மிகவும் சமீபத்தியது மற்றும் பெரும்பான்மையானது தேவநாகரி. நம் தமிழ் மொழி தொன்மையையும் வரலாற்றையும் நமக்கு சரிவர கடத்துவது எழுத்துக்கள். அவ்வகையில் எழுத்துக்கள் முக்கியத்துவம் பெருகின்றன.

உரோமானிய எழுத்துக்களில் பாரத மொழிகளை எவ்வாறு சர்வதேசமயமாக்குவது என்பது அடுத்த கேள்வி.

பாரத மொழிகளை ஏன் சர்வதேசமயமாக்க வேண்டும்? வெளிநாட்டவர்கள் பாரத நூல்களைப் படித்துப் புரிந்துகொள்வதற்கு! உரோமானிய எழுத்துக்களில் ஏன்? ஏனெனில் ஐரோப்பியர்கள் புதிய உலக ஒழுங்கை (பிந்தைய காலனித்துவம்) எழுதியுள்ளனர் மற்றும் ஆங்கிலம் உலகில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மொழியாகும். நவீன காலத்தில் பாரததிற்கு ஒரு பொதுவான எழுத்துமுறை தேவை, தேவநாகரியை சங்கதம்/இந்தி மூலம் நாம் நிராகரித்துள்ளோம், எனவே அடுத்த தேர்வு ஆங்கில/ரோமானிய எழுத்துக்கள் மட்டுமே.

நீங்கள் ஆங்கில பதிப்பை வாசிக்கிறீகள் என்றால், ஆங்கிலத்தில் எழுதப்படும் தமிழ், பாளி மற்றும் சங்கத வார்த்தைகளை எவ்வாறு சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். நீங்கள் IAST தரத்தைக் கற்றுக்கொண்டால் மட்டுமே அது சாத்தியமாகும். அயல்நாட்டில் வளரும் நம் பிள்ளைகள் ஆங்கில எழுத்து முறையையே பயில்கின்றனர். அதன் மூலமும் அவர்கள் தமிழைக் கற்க IAST ஏதுவாக உள்ளது.

IAST-ல் உள்ள தவறுகள்

IAST என்பது ஆங்கில எழுத்துகளின் சூப்பர்செட் ஆகும், மேலும் இது பாரத மொழி ஒலிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஆங்கிலத்தை விட சிறப்பான பணி செய்கிறது. இருப்பினும் இது பிராமி அல்லது தேவநாகரி போன்ற பாரத எழுத்துக்களுக்கு இணையானது இல்லை.

தமிழில் என்ற ஒலியை எடுத்துக் கொள்ளுங்கள். இது IAST-ல் T என எழுதப்படும். ஒரு பாமரன் (நம் படித்த தமிழ் மக்கள் உட்பட) Tamil என்பதை டாமில் என்று படிக்கிறான்.

ஒலியை எடுத்துக் கொள்ளுங்கள்: मोदी என்ற வார்த்தை IAST-ல் Mōdī என்றும் ஆங்கிலத்தில் Modee என்று எழுதப்பட்டுள்ளது. வெளிநாட்டிலோ அல்லது தமிழ்நாட்டிலோ கூட இந்தி அறிமுகம் இல்லாத ஒரு சாமானியர் அதை மோடி என்று உச்சரிக்கிறார். தல தோனி ரசிகர்கள் அனைவருக்கும், 2015க்கு முன் தமிழ் ஊடகங்கள் அவரது பெயரை டோணி என்று எழுதியது நினைவிருக்கிறதா? தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் இதைப் படித்திருப்பார்கள். இது ஊடகத்தின் எழுத்து மற்றும் ஒலிகள் பற்றிய புரிதல் இல்லாதது.

IAST-ல் என்ன திருத்தம் செய்ய வேண்டும்?

செய்ய வேண்டிய பல திருத்தங்கள் உள்ளன. ஆனால் குறைந்தபட்சம்:

  • T மற்றும் பயன்பாட்டை மாற்றவும். T என்றால் ட/ट என்றும் என்றால் த/त என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

  • D மற்றும் பயன்பாட்டை மாற்றவும். D என்றால் ட/ड என்றும் என்றால் த/द என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

  • G, J, T, D, B ஆகியவற்றிற்கும் இதே மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். சொற்களுக்கு நடுவில் இருக்கும் மெல்லிய ஒலிகளை அவை குறிக்க வேண்டும். மாறாக கடுமையான ஒலிகளை குறிக்க பயன்படும் K, C, T, D, P ஆகிய எழுத்துக்கலால் எழுதப்படுகின்றன.

இது நடக்குமா என்றெனக்கு தெரியாது, அனால் இது நடந்தேறினால் மிகவும் மகிழ்ச்சி!

தமிழ் எழுத்துக்கள்

தமிழ் மொழி எழுத்துக்கள்

தேவநாகரி எழுத்துக்கள்

தேவநாகரி எழுத்துக்கள்

பாரதத்தில் தோன்றிய மொழிகளில் உயிரெழுத்துக்கள்

இப்பட்டியலில் ஒவ்வொரு மொழியிலும் உயிரெழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு மொழியில் குறிப்பிட்ட உயிரெழுத்துக்களின் இருப்பை பச்சை நிறத்திலும் இல்லாமையை சிகப்பு நிறத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.

பாரதத்தில் தோன்றிய மொழிகளில் உயிரெழுத்துக்கள்

பாரதத்தில் தோன்றிய மொழிகளில் மெய்யெழுத்துக்கள்

இப்பட்டியலில் ஒவ்வொரு மொழியிலும் மெய்யெழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு மொழியில் குறிப்பிட்ட மெய்யெழுத்துக்களின் இருப்பை பச்சை நிறத்திலும் இல்லாமையை சிகப்பு நிறத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.

பாரதத்தில் தோன்றிய மொழிகளில் மெய்யெழுத்துக்கள்

தமிழ் சொற்கள் மற்றும் அவற்றின் ஆங்கில பொருள்கள்

ஆங்கிலப் பதிப்பில் பயன்படுத்திய சொற்களிற்கு இந்நூலில் இணையக பயன்படுத்திய தமிழ்ச் சொற்களை இங்கு வழங்கியுள்ளேன்.

தமிழ் சொற்களும் அவற்றின் ஆங்கில பொருள்களும்

English

தமிழ்

Consciousness

நனவு

Wisdom

ஞானம்

Mindfulness

தொடர்நிறைகவனம்

Concentration

சமாதி/ஒருங்குநிலை/குவியல்

Insight

நுண்ணறிவு, ஆழ்ந்தறிவு, ஆழ்நோக்கு

Enlightenment

ஞானத்தெளிவு/நிர்வாணம்

Suffering/Dissatisfaction

துக்கம்/மனக்குறை/மனநிறைவாமை

Information

தகவல்/விஷயம்

Knowledge

அறிவு

Conscious perception

நனவுக்காட்சி

Inner perception

அகப்பார்வை

Reality

மெய்நிலை

Impermanence

நிலையாமை

Meditation

யோகம்/தியானம்

Mind

மனம்

Body

உடல்

Emotion, Feeling

உணர்வு

Sensation

புலனுணர்வு

Sensate Reality

புலன்மெய்நிலை

Careful

அக்கறையுடன்

Awareness

விழிப்புணர்வு/கவனம்

Awakening

விழித்தெழுதல்/விழிப்புநிலை/நிர்வாணம்

Attention

கவனம்

Decadence

நலிவு

Attachment

இணைப்பு

Detachment

விலக்கு

Liberation

விடுதலை/விடுபெறு/நிர்வாணம்

Rebirth

மறுபிறப்பு

Karma

கர்மம்/வினை

Theravada

தேரவாதம்

Vipassanā

நுழைபுலதியானம், நுன்னறிவுதியானம்