இரண்டாம் பதிப்பின் முகவுரை¶
1997ஆம் ஆண்டு முதல் நான் துண்டுச் சீட்டுகளாகவும் சிறுநூட்களாகவும் எழுதத் துவங்கிய புத்தகமே ஒரு நாள் "புத்தரின் ஆழ்ந்த போதனைகளை சிறப்புற கற்றல்" என்ற நூலாக வெளிவந்தது (2018ல் பல ஆண்டுகளை கடந்து வந்தது போல் தோண்றுகிறது, அது உண்மையும் கூட). அன்றிலிருந்து பலவை மாறியுள்ளன - நான் பயில்வதில் மாற்றம், தியானம் பயிலும் உலகில் மாற்றங்கள், தியானம் பயிலும் உலகைப்பற்றியும் மனவளமையைப்பற்றியும் எனது பார்வையில் மாற்றங்கள், மற்றும் இவ்வுலகின் பொதுமாற்றங்கள். இணையத்தின் வளர்ச்சி இதற்கு முன் கண்டிராத பன்கள உடனுழைப்பை சாத்தியமாக்கி உலகெங்கிலும் உள்ள தெளிவற்ற மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட தியான பயிற்சியாளர்கள் திடீரென்று ஒன்றுகூடி, தங்கள் அனுபவங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள வழிவகுத்துள்ளது. அறத்தின் மீதான தாக்கத்தை இது ஆழமாக்கியுள்ளது. இச்சாத்தியத்தின் சிறிய தொடக்கத்தை மட்டுமே இதுவரை கண்டுள்ளோம் என நான் கருதுகிறேன்.
முதல் பதிப்பில் எனக்கு கருத்து தெரிவித்த பலருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் வழங்கிய ஒவ்வொரு பயனுள்ள ஆலோசனையையும் இப்பதிப்பில் இணைக்க முயற்சித்துள்ளேன். அவ்வகையில் இவ்விரண்டாம் பதிப்பிற்க்கு எவ்வகையான கருத்துக்களை வழங்கினாலும் (நல்லதோ, கெட்டதோ, அல்லது வேறுவிதமானதோ), கருத்துகள் நடைமுறை மற்றும் ஆக்கபூர்வமானதாக இருந்தால், அவை இந்நூலில் சில நேர்மறை விளைவை ஏற்படுத்தும்.
பரவலாகக் கிடைத்த முதல் பதிப்பு 2008 இல் வெளிவந்தது, ஆனால் அதன் பெரும்பகுதி 1997 முதல் 2001 வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்டது. 2006 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் "அறிவொளி நிலைகளின் மாதிரிகள்" என்ற அத்தியாயம் மேம்படுத்தப்பட்டது. இருப்பினும், அதன் பின்னர் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன, மேலும் பல பயனுள்ள வாசகர் மற்றும் பயனர் கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன, அவை சமீபத்தில் வெளியிடப்பட்ட எனது படைப்பு ஏற்கனவே மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று எனக்கு உணர்த்தியது, எனவே இந்த இரண்டாவது பதிப்பு வந்துள்ளது.
பல பிரிவுகள் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக செறிவு பற்றிய பிரிவு, மற்றும் மேலும் பல விஷயங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இறுதியில் சுயசரிதை பகுதியையும் சேர்த்துள்ளேன், இது இந்நூலில் நீங்கள் அறியக்கூடிய சிலவற்றின் பின்னணியை விளக்க உதவும் என்று நம்புகிறேன். வாசகர் அவ்வகையான விவரங்களைக் கேட்டுக்கொண்டே இருந்தனர், அதே போல் அந்தத் தகவல் இல்லாததால் எனது வரலாற்றுப் பகுதிகளை மிகவும் தவறாகப் பெறுகிறார்கள். இந்த புள்ளிகள் சில நடைமுறை மதிப்புள்ள விஷயங்களை தெளிவுபடுத்த உதவும் என்று நம்புகிறேன். மறுபுறம், MCTB1 இல் உள்ள சிறிய சுயசரிதை விவரங்களைக் கூட நீக்குமாறு சிலர் என்னிடம் கோரினர். இத்தலைப்புகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும் (எழுத வேண்டும்) என்ற அடிப்படை அடிப்படைக் கொள்கையுடன் நான் தெளிவாக வேறு திசையில் சென்றுவிட்டேன். இவ்வாறு செய்யாதது முந்தைய பதிப்பில் ஒரு பாசாங்குத்தனமான அம்சத்தைக் கொண்டிருந்தது மற்றுமின்றி பயிற்சி மற்றும் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கும் சில கருத்துக்களை தெரிவிக்கத் தவறிவிட்டது.
நான் அறிந்த பல இடங்களில் நுட்பத் தகவல்கள் விவரிக்கப்படாததால், புரிதலுக்கும் பின்பற்றுதலுக்கும் ஏதுவாக பல வழிதடங்களையும் சேர்த்துள்ளேன். அவை ஒரு வரைபடமாக உதவுமென நம்புவதால் அவற்றை விலாவரியாக விளக்கியுள்ளேன். அறத்தை உணருகையில் நான் ஏங்கி எதிர்பார்த்து விரும்பிய விவரங்கள் இவை, எனவே நான் செய்ததைப் போலவே பிற வாசகரும் அவ்விவரங்களைப் பாராட்டுவார்கள் எனக் கருதி இவற்றை மொழிகிறேன். இவை உங்களுக்கு அதிகமாக இருந்தால் இவற்றை புறக்கணிக்கவும், ஏனெனில் அடிப்படைப் பயிற்ச்சிகளானது நீங்கள் என்னைப் போன்று அனைத்தையும் நுட்பரீதியாக அனுகுபவரா இல்லையா எனப்பொருட்படுத்தாமல் செயல்படுகின்றன.
"தர்மா ஓவர்கிரவுண்ட்" மற்றும் அதன் விழுது சமூகங்களின் (மறைந்த மற்றும் வாழும்) உறுப்பினர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின்றி என் வாழ்வும் பயிர்சியும் இன்றிருக்கும் அளவு சிறப்பாக இருந்திருக்காது. மேலும் அவர்கள் எண்ணற்ற வழிகளில் இப்பரந்த உலகத்தைப் பற்றிய என் புரிதலை சாத்தியமான மற்றும் பயனுள்ளவாறு மேம்படுத்தியதால் அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
உங்கள் பயிற்சிக்கு உதவும் மற்றும் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒன்றை நீங்கள் இவ்விரண்டாம் பதிப்பில் காண்பீர்கள் என நம்புகிறேன்.